/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி பூண்டு ரூ.500 பிற மாநில பூண்டு ரூ.400 உச்சம் தொட்ட விலை
/
ஊட்டி பூண்டு ரூ.500 பிற மாநில பூண்டு ரூ.400 உச்சம் தொட்ட விலை
ஊட்டி பூண்டு ரூ.500 பிற மாநில பூண்டு ரூ.400 உச்சம் தொட்ட விலை
ஊட்டி பூண்டு ரூ.500 பிற மாநில பூண்டு ரூ.400 உச்சம் தொட்ட விலை
ADDED : பிப் 02, 2024 01:02 AM

ஊட்டி:ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளான எம்.பாலாடா, கல்லக்கொரை ஹாடா, கொல்லிமலை ஓரநள்ளி, தேனாடுகம்பை, கடநாடு, கார பிள்ளு, எப்பநாடு சுற்றுவட்டார பகுதிகளில் மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
இதில், நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளை பூண்டுக்கு ருசி, மணம் இருப்பதால் தமிழகம் உட்பட பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. எப்போதும் ஊட்டி பூண்டுக்கு நல்ல விலை கிடைப்பதால் அந்தந்த போகத்திற்கு ஏற்றார் போல் அதிகளவில் பயிரிடுகின்றனர். அறுவடைக்கு பின், ஊட்டி மார்க்கெட், மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு விவசாயிகள் விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர்.
கடைபோகத்தில் பயிரிட்ட ஊட்டி பூண்டு அறுவடைக்கு தயாராக நாட்கள் இருப்பதால், ஊட்டி மார்க்கெட்டுக்கு கிலோ கணக்கில் மட்டுமே விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இதனால், இமாச்சலம், காஷ்மீர் பகுதிகளிலிருந்து ஊட்டி மார்க்கெட்டுக்கு பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்றை நிலவரப்படி, ஊட்டி பூண்டு கிலோவுக்கு , 500 ரூபாய், பிற மாநில பூண்டு கிலோ, 400 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
பூண்டு விலை உச்சம் தொட்டதால் விலையை கேட்கும் பொதுமக்கள் கிராம் கணக்கில் வாங்கி செல்கின்றனர்.
ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் குமார் கூறுகையில்,''பயிரிடப்பட்ட ஊட்டி பூண்டு அறுவடைக்கு தயாராகாததால் வரத்து குறைந்துள்ளது. ஊட்டி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும் பிற மாநில பூண்டு வரத்து குறைந்தளவில் வருவதால் விலை உச்சத்தை எட்டியுள்ளது,'' என்றார்.

