/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓவேலி தொட்டம்மன் கோவில் தேர் திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு
/
ஓவேலி தொட்டம்மன் கோவில் தேர் திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு
ஓவேலி தொட்டம்மன் கோவில் தேர் திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு
ஓவேலி தொட்டம்மன் கோவில் தேர் திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு
ADDED : மார் 25, 2025 09:15 PM

கூடலுார்; கூடலுார் ஓவேலி ஸ்ரீ தொட்டம்மன் ஆலயம், ஸ்ரீ மண்டேஸ்வரர் ஆலய தேர்திருவிழா சிறப்பாக நடந்தது.
கூடலுார் ஓவேலி சீபோர்த் எஸ்டேட் அருள்மிகு ஸ்ரீ தொட்டம்மன் ஆலயம், ஸ்ரீ மண்டேஸ்வரர் ஆலயம் தேர் திருவிழா, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. 21ம் தேதி மாலை, 6:00 மணிக்கு தேவன் குட்டன்மார்கள் பூஜையும், தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 22ம் தேதி 9:00 மணிக்கு மாவிளக்கு பூஜை ஊர்வலம் நடந்தது.
23ம் தேதி காலை, 7:30 மணிக்கு, குண்டம் நிகழ்ச்சியும், தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 10:00 மணிக்கு திரு தேர் ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் காலை முதல் சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவு பெறுகிறது.