ADDED : ஜன 23, 2024 11:46 PM
சூலூர்;நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளை ஒட்டி, சூலூர் கேந்திரிய வித்யாலயாவில் ஓவிய போட்டி நடந்தது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின், 127 வது பிறந்த நாளை(பராக்கிரம திவஸ்) முன்னிட்டு, சூலூர் கேந்திரிய வித்யாலயாவில் ஓவிய போட்டி நடந்தது.
எட்டு பள்ளிகளில் இருந்து, 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆர்வத்துடன் ஓவியங்களை வரைந்தனர்.
தேர்வுகளை எதிர்நோக்கும் மாணவர்களின் அச்சத்தை போக்கும் விதத்தில், போட்டிகள் நடத்தப்பட்டன. சந்திரயான் சாதனை, விகாசித் பாரத், தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள், விளையாட்டில் சாதனைகள் உள்ளிட்ட கருப்பொருள்களின் அடிப்படையில் ஓவியங்களை வரைந்து, தங்கள் திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.
தேசிய அளவில் நடக்கும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன. பள்ளி முதல்வர் ராகேஷ் குமார் மிஷ்ரா, போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

