/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எரியாத தெரு விளக்கு: இருளில் மக்கள் அவதி
/
எரியாத தெரு விளக்கு: இருளில் மக்கள் அவதி
ADDED : பிப் 01, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:ஊட்டி கோடப்பமந்து பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்குகள் எரியாததால் இருளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட கீழ் கோடப்பமந்து; - மேல் கோடப்பமந்து பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு பொருத்தப்பட்டுள்ள பல தெருவிளக்குகள் எரிவதில்லை.
இதனால், இருள் சூழ்ந்த ஒத்தையடி பாதையில் மக்கள் நடந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பலர் தடுக்கி விழுந்து காயம் அடைந்துள்ளனர்.
வனத்தை ஒட்டி, இப்பகுதி அமைந்துள்ளதால், இரவு நேரத்தில் வனவிலங்குகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி, தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.

