/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் அபாய மரங்களை வெட்ட மனு
/
வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் அபாய மரங்களை வெட்ட மனு
வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் அபாய மரங்களை வெட்ட மனு
வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் அபாய மரங்களை வெட்ட மனு
ADDED : மார் 25, 2025 09:13 PM
குன்னுார்; 'குன்னுார் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் உள்ள அபாய மரங்களை வெட்ட வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில், அவ்வப்போது பெய்யும் மழையை தொடர்ந்து, வெயில் மற்றும் பலத்த காற்று என மாறுபட்ட காலநிலை நிலவுகிறது.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை எஸ்டேட் குடியிருப்பு மீது பைன் மரம் விழுந்தது. கற்களால் அமைக்கப்பட்ட பழமை வாய்ந்த கல் குடியிருப்பு என்பதால் வீட்டில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
எனினும், மரக்கிளைகள் முழுவதும் வீட்டை மூடியதால், ஊழியர் சரவணன் என்பவரின் மனைவி மற்றும் குழந்தை வீட்டிற்குள் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
தகவலின் பேரில், அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி, மரத்தை வெட்டி அகற்றினர்.
தொழிலாளர்கள் கூறுகையில், 'வெடி மருந்து தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் அபாயகரமான மரங்கள் உள்ளதால், வெட்டி அதற்றி பாதுகாப்பு அளிக்க, யூனியன் நிர்வாகிகள் தொழிற்சாலை நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர்.
'மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கிடைத்தவும் வெட்டுவதாக கூறி உள்ளனர். எனவே, தொழிலாளர் குடும்பங்களின் பாதுகாப்பு கருதி அபாய மரங்களை வெட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி தர வேண்டும்,' என்றனர்.