/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழுதடைந்த அரசு பஸ்கள் மாற்ற வேண்டி மனு
/
பழுதடைந்த அரசு பஸ்கள் மாற்ற வேண்டி மனு
ADDED : மார் 28, 2025 03:34 AM
குன்னுார்: 'குன்னுார் காட்டேரி டேம் உட்பட பல கிராமங்களுக்கு பழுதடைந்த அரசு பஸ்களை இயக்குவதால், புதிய பஸ்கள் இயக்க வேண்டும்,' வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து காட்டேரி டேம், நடுஹட்டி கிராமங்களுக்கு அரசு பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் இயக்கப்படுகிறது. பாதுகாப்பில்லாத பயணம் மேற்கொள்வதால், அதனை மாற்றி தர மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, கோடநாடு முன்னாள் ஊராட்சி தலைவர் பொன்தோஸ் தலைமையில், விவேக் மற்றும் கோவர்த்தன் ராமசாமி ஆகியோர், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து மனு வழங்கினர். இதற்கு தீர்வு காண அமைச்சர் உறுதி அளித்ததால், இப்பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள், புதிய பஸ்களுக்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.