/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்புகளை ஒட்டி யானைகள் முகாம்: தாகம் தணிக்க வருவதால் பாதுகாப்பு அவசியம்
/
குடியிருப்புகளை ஒட்டி யானைகள் முகாம்: தாகம் தணிக்க வருவதால் பாதுகாப்பு அவசியம்
குடியிருப்புகளை ஒட்டி யானைகள் முகாம்: தாகம் தணிக்க வருவதால் பாதுகாப்பு அவசியம்
குடியிருப்புகளை ஒட்டி யானைகள் முகாம்: தாகம் தணிக்க வருவதால் பாதுகாப்பு அவசியம்
ADDED : பிப் 01, 2024 10:21 PM

பந்தலுார்:'பந்தலுார் அருகே காவயல் பகுதியில், குடியிருப்புகளை ஒட்டிய தடுப்பணையில் தண்ணீர் குடிக்க யானைகள் அடிக்கடி வருவதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே மழவன் சேரம்பாடியில் இருந்து, கையுன்னி, புஞ்சைகொல்லி, காவயல் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் இரண்டு பக்கமும் கிராம குடியிருப்புகள் மற்றும் டான்டீ தேயிலை தோட்டமும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் குடியிருப்புகளும் அமைந்துள்ளது.
குடியிருப்பு பின்பகுதியில் புதர் பகுதி மற்றும் தடுப்பணைகள் உள்ளன. இதனால், இந்த பகுதியில் எந்த நேரமும் யானைகள் முகாமிட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, 2 குட்டிகளுடன் 5 யானைகள் முகாமிட்டு உள்ளன.
பகல் நேரங்களில் யானைகள் குடியிருப்புகளை ஒட்டி முகாமிட்டு இருப்பதால், தொழிலாளர்கள்; உள்ளூர் மக்கள் தண்ணீர் எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் கூறுகையில், 'பகல் நேரங்களில் வீடுகளின் பின் பகுதி புதர்களில் முகாமிடும் யானைகள், இரவில் வாசல்களில் முகாமிட்டு அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர் வெறும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதை தவிர்த்து, அடர்த்தியான வனத்திற்குள் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வனக்குழுவினர் இந்த பகுதியில், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடியிருப்புகளை ஒட்டிய தடுப்பணையில் தண்ணீர் குடிக்க யானைகள் அடிக்கடி வருவதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,' என்றனர்.

