/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சீரமைக்கப்பட்ட பள்ளி அர்ப்பணிக்கும் விழா
/
சீரமைக்கப்பட்ட பள்ளி அர்ப்பணிக்கும் விழா
ADDED : பிப் 01, 2024 10:21 PM
அன்னுார்:அன்னுாரில் முன்னாள் மாணவர்கள் சார்பில், 2 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா இன்று நடக்கிறது.
அன்னுாரில் 73 ஆண்டுகளாக அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் பலர் பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு பல பணிகளை கடந்த ஆண்டு துவக்கினர்.
வகுப்பறைகளை சீரமைத்தல், அறிவியல் ஆய்வுக்கூடம், புதிய ஆய்வக கட்டடம், ஸ்மார்ட் வகுப்பறை, நூலக கட்டடம் புதுப்பித்தல், 73 கண்காணிப்பு கேமரா அமைத்தல், 20 வகுப்புகளுக்கு, மின்விளக்கு மற்றும் மின்விசிறி அமைத்தல், மாணவர்களின் இருக்கை புதுப்பித்தல், 35 வகுப்பறைகளுக்கு மேஜை அளித்தல் உள்ளிட்ட பணிகளை 2 கோடி ரூபாய் செலவில் செய்துள்ளனர்.
இந்த பணிகளை பள்ளிக்கு அர்ப்பணிக்கும் விழா இன்று (2ம் தேதி) மதியம் 2:30 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இதில் தலைமைச் செயலாளர் (ஓய்வு) இறையன்பு சிறப்புரையாற்றுகிறார். கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

