/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடநாட்டில் இருந்து திரும்பினார் சசிகலா
/
கோடநாட்டில் இருந்து திரும்பினார் சசிகலா
ADDED : ஜன 21, 2024 01:22 AM
கோத்தகிரி;கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், இரண்டு நாட்கள் தங்கி இருந்த சசிகலா, நேற்று காலை சென்னை திரும்பினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த, 18ம் தேதி மாலை, 6:40 மணிக்கு கோடநாடு எஸ்டேட்டிற்கு வருகை தந்தார்.
அன்று இரவு எஸ்டேட்டில் தங்கிய அவர், மறுநாள், (20ம் தேதி) எஸ்டேட்டிற்குள் கோடநாடு காட்சிமுனை செல்லும் சாலை ஓரத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்கும் இடத்தில் பூமி பூஜையில் பங்கேற்றார். பிறகு, கர்சன் எஸ்டேட்டிற்கு சென்றார்.
தொழிலாளர்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்களிடம், குறை, நிறைகளை கேட்டறிந்த சசிகலா மீண்டும் கோடநாடு எஸ்டேட்டிற்கு திரும்பி தங்கினார். இரண்டு நாட்கள் கோடநாட்டில் தங்கி இருந்த சசிகலா, நேற்று காலை, 11:00 மணிக்கு, எஸ்டேட்டில் இருந்து சாலை வழியாக கோவை சென்றார்.

