/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகரில் வழிந்தோடும் கழிவுநீர் சுகாதார சீர்கேடால் நோய் அபாயம்; சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி

ADDED : ஜூன் 24, 2025 09:31 PM
ஊட்டி; ஊட்டி மைய பகுதியில் அதிகரித்து வரும் சுகாதார சீர்கேடால் சுற்றுலா பயணியர் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான வார்டுகள் பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுக்கு முன்பு பொருத்தப்பட்ட குழாய்கள் என்பதால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டும் காணப்படுகிறது. மேலும், கழிவு அடைப்பால் மழை சமயங்களில் கழிவுநீர் மழை நீருடன் கலந்து வெளியேறுவது வாடிக்கையாகிவிட்டது.
நகரில் முக்கிய சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது நகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை.
அதில், ஊட்டியின் மையப் பகுதியான மார்க்கெட் எதிரே லோயர் பஜார், ஏ.டி.சி. , சாலையை இணைக்கும் சாலையில் கழிவு நீரால் சேறும், சகதியும் சேர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், உள்ளூர் மக்கள்; சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைகின்றனர்.
நகராட்சி கமிஷனர் வினோத் கூறுகையில், ''ஊட்டி நகரில் கழிவுநீர் வெளியேறும் இடங்களை அடையாளம் கண்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.