sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோவில்களில் ஸ்ரீராம பஜனையுடன் சிறப்பு பூஜை

/

கோவில்களில் ஸ்ரீராம பஜனையுடன் சிறப்பு பூஜை

கோவில்களில் ஸ்ரீராம பஜனையுடன் சிறப்பு பூஜை

கோவில்களில் ஸ்ரீராம பஜனையுடன் சிறப்பு பூஜை


ADDED : ஜன 23, 2024 12:58 AM

Google News

ADDED : ஜன 23, 2024 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள கோவிலில் பஜனையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமர் கோவிலில் நேற்று பகல், 12:30 முதல் 12:40 மணி வரை பிராண பிரதிஷ்டை நடந்தது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தன.

அதன் ஒரு பகுதியாக, கூடலுார் தொரப்பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீராமர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி ராமரை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் கமிட்டி தலைவர் மணி, செயலாளர் பிஜூ, பொருளாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூடலுார், விநாயகர் கோவிலில், ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று பஜனை பாடினர். புத்துார் வயல் மகாவிஷ்ணு கோவிலில், பக்தர்களின் பஜனையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.

மண்வயல் ஸ்ரீமாதேஸ்வரன் கோவில், மசினகுடி மசியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மசினகுடி துர்கா பரமேஷ்வரியம்மன் கோவில், அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீராமர் படத்துக்கு பூஜைகள் நடந்து. பக்தர்கள் பஜனை பாடி வழிபட்டனர்.

முதல் மைல் அருகே உள்ள ஸ்ரீ ராமர் கோவிலில், சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அயோத்தி நிகழ்ச்சி நேரலை


பந்தலுார் அருகே எருமாடு சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் கமிட்டி தலைவர் சதானந்தன் தலைமை வகித்தார்.

ஆர்.எஸ்.எஸ். மாநில நிர்வாகி ராமகிருஷ்ணன், தாலுகா நிர்வாகி விஜேஷ், உள்ளிட்டோர் முன்னிலையில், அயோத்தி நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டதுடன், ஸ்ரீ ராமநாமம் கூறி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அய்யன்கொல்லி முருகன் கோவில், பிதர்காடு பஞ்சோரா மாரியம்மன் கோவில், வெள்ளேரி, வாலாட்டு, பொன்னானி மகா விஷ்ணு கோவில்களில் பூஜைகள் செய்யப்பட்டு, ஸ்ரீ ராம மந்திரம் கூறி பஜனை செய்தனர்.

நிகழ்ச்சியில், இந்து சமய தலைவர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஜெய் ஸ்ரீராம் கோஷம்


கோத்தகிரி, திம்பட்டி கிராமத்தில் உள்ள ராம கிருஷ்ணர் கோவிலில், அயோத்தியில் நடந்த ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை ஒட்டி, ஐயனுக்கு அதிகாலை முதல், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

அகண்ட பஜனையுடன், ஸ்ரீ ராமரை போற்றி, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், கிராமத்தை சேர்ந்த அனைத்து மக்களும் ஐயனை மனம் உருகி வழிபட்டனர்.

கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும், கும்பாபிஷேக அட்சதியை வைத்து, தீபமேற்றி வழிபாடு நடந்தது.

இதே போல, கோத்தகிரி அருள்மிகு மாரியம்மன் கோவில், ஊட்டி அருகே உள்ள கலிங்கனட்டி ஸ்ரீ ராமர் கோவில், கோத்தகிரி சக்தி மலை ஆஞ்சநேயர் கோவில், ஒன்னதலை ஹெத்தையம்மன் கோவில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்துடன் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. 'நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவரும், அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலயத்திற்கு நேரடியாக சென்று, சீதை மணாலனை தரிசிக்க வேண்டும்,' என, வலியுறுத்தினர்.

பா.ஜ., சிறப்பு வழிபாடு


குந்தா ஒன்றிய பா.ஜ., வினர் எடக்காடு, முக்கிமலை, முள்ளிமலை, மஞ்சூர் நகர், தூனேரி, மட்டக் கண்டி உட்பட பல்வேறு கிராமங்களில் கிராம மக்களுடன் இணைந்து கிராமகோவில்களில் சிறப்பு பஜனை பாடல்களுடன் ஸ்ரீ ராமர் பாராயணம் மற்றும், 108 முறை ஸ்ரீராம் ஜெய்ராம் உச்சரித்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

முன்னதாக பகல் 12:25 மணியளவில் அட்சதை பிரசாதத்தை பொதுமக்கள் அனைவரும் பகவான் ஸ்ரீ ராமர் புகைப்படத்திற்கு இட்டு ஸ்ரீராமரின் அருளை பெற்றனர்.

மாலை, 6:00 மணியளவில் வீடுகளில் விளக்கேற்றப்பட்டதுடன் அனைத்து ஆலயங்களிலும் தீபம் ஏற்றப்பட்டு கிராமங்கள் தீபஒளியால் ஜொலித்தது.

இந்த நிகழ்ச்சியில், குந்தா ஒன்றிய ப.ஜ., தலைவர் ரமேஷ்ராஜன் பீமன், ஓ.பி.சி., மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட துணை தலைவர் பிரகாஷ்,மாவட்ட மகளிர் அணி தலைவி சரஸ்வதி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

அட்சதையிட்டு பக்தர்கள் பிரார்த்தனை


ஊட்டி எச்.பி.எப்., பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, பஜனை நிகழ்ச்சி நடந்தது. 12:25 மணியளவில் அட்சதை பிரசாதத்தை பொதுமக்கள் அனைவரும் பகவான் ஸ்ரீராமர் புகைப்படத்திற்கு இட்டு, பிரார்த்தனை செய்து, ஸ்ரீராமரின் அருளை பெற்றனர்.

நிகழ்ச்சியில் பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உட்டட பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஊட்டி லோயர் பஜார் பகுதியில் உள்ள விட்டோபா கோவிலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, நடந்த நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் சபா உறுப்பினர்கள், இளைஞர் நல சங்க உறுப்பினர்கள், காந்தள் துக்காரம் பஜனை மடாலயம், அம்பா பவானி மகளிர் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்ற பஜனை நிகழ்ச்சி நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது.

ஊட்டி ஹரிகர பஜனை சபாவில் நடந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, ராம பக்தர் நாகராஜ் தலைமையில் ஊட்டி ராம பக்தர்கள் சார்பில் பஜனை நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அபிஷேகம், அன்னதானம் வழங்கப்பட்டது.

திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us