/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாவரவியல் பூங்கா புல்தரை மைதானம் பனியில் இருந்து காக்க 'ஸ்பிரிங்ளர்' தண்ணீர்
/
தாவரவியல் பூங்கா புல்தரை மைதானம் பனியில் இருந்து காக்க 'ஸ்பிரிங்ளர்' தண்ணீர்
தாவரவியல் பூங்கா புல்தரை மைதானம் பனியில் இருந்து காக்க 'ஸ்பிரிங்ளர்' தண்ணீர்
தாவரவியல் பூங்கா புல்தரை மைதானம் பனியில் இருந்து காக்க 'ஸ்பிரிங்ளர்' தண்ணீர்
ADDED : ஜன 24, 2024 01:03 AM

ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில், உறைபனியிலிருந்து புல்தரை மைதானத்தை பாதுகாக்க, 'ஸ்பிரிங்ளர்' மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
ஊட்டியில் நவ., மாதம் துவங்கும் உறை பனி, ஜன., மாதம் இறுதி வரை தென்படும். கடந்த ஆண்டு, சீதோஷ்ண நிலை மாறுபாடு காரணமாக, அவ்வப்போது மழை பெய்ததால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பனிபொழிவு தாமதமாக தொடங்கியது.
கடந்த டிச., 24ம் தேதி தென்பட்ட உறை பனியின் போது, குறைந்தபட்ச வெப்பநிலை, 4 டிகிரி செல்சியஸ் பதிவானது. அதன்பின் கடும் மேகமூட்டம், மழையால் உறை பனி தென்படவில்லை. அவ்வப்போது நீர் பனி மட்டும் தென்பட்டது.கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தென்பட்ட உறை பனிக்கு, 3 டிகிரி செல்சியஸ் பதிவானது.
இதுவரை எதிர்பார்த்த அளவு உறை பனி தாக்கம் இல்லை என்றாலும் காலை, மாலை நேரங்களில் குளிர் நிலவுகிறது. நேற்று, அதிகபட்ச வெப்பநிலை, 22 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை, 2 டிகிரி செல்சியஸ் பதிவானது.
உதவி தோட்டக்கலை இயக்குனர் பாலசங்கர் கூறுகையில்,''அரசு தாவரவியல் பூங்காவில் நடப்பாண்டு கோடை சீசனுக்காக முன்னதாகவே, பூங்காவில் தொட்டிகளில் மலர் நாற்றுக்கள் நடவு, பாத்திகள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. பிரதான புல்தரை மைதானத்தை உறை பனியிலிருந்து பாதுகாக்கும் வகையில் காலை நேரத்தில் 'ஸ்பிரிங்ளர்' தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது,'' என்றார்.

