/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.40 கோடி செலவில் ஸ்டேடியம் புதுப்பிப்பு; திருவனந்தபுரம் கூட்டத்தில் முடிவு
/
ரூ.40 கோடி செலவில் ஸ்டேடியம் புதுப்பிப்பு; திருவனந்தபுரம் கூட்டத்தில் முடிவு
ரூ.40 கோடி செலவில் ஸ்டேடியம் புதுப்பிப்பு; திருவனந்தபுரம் கூட்டத்தில் முடிவு
ரூ.40 கோடி செலவில் ஸ்டேடியம் புதுப்பிப்பு; திருவனந்தபுரம் கூட்டத்தில் முடிவு
ADDED : ஜன 19, 2024 12:26 AM
பாலக்காடு : பாலக்காடு நகராட்சியில் உள்ள இந்திரா காந்தி முனிசிபல் ஸ்டேடியத்தை, 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் மாநில விளையாட்டு துறை அமைச்சர் அப்துல் ரகுமான் தலைமையில், பாலக்காடு மாவட்ட ஸ்டேடியம் திட்டம் குறித்த கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், கலால் துறை அமைச்சர் ராஜேஷ், பாலக்காடு எம்.எல்.ஏ., ஷாபி பரம்பில், மாவட்ட விளையாட்டு மன்றத் தலைவரான எம்.எல்.ஏ., பிரேம்குமார், பாலக்காடு நகராட்சி தலைவர் பிரமீளா, விளையாட்டுத் துறை செயலாளர் பிரணப் ஜோதிநாத், இயக்குனர் ராஜ்குமார் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, எம்.எல்.ஏ., ஷாபி பரம்பில் கூறியதாவது:
நீண்ட நாட்களாக, ஸ்டேடியம் திட்டத்துக்காக பாலக்காடு மாவட்டம் காத்திருக்கிறது. இந்தத் திட்டம் மாவட்டத்தின் விளையாட்டு துறையின் வளர்ச்சியில் மைல்கல்லாகும்.
இந்திராகாந்தி முனிசிபல் ஸ்டேடியம் திட்டத்தின் வாயிலாக, 40 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் நிறைவேற்றப்பட்டால், விளையாட்டு பயன்பாட்டிற்காக மட்டுமே மைதானம் அனுமதிக்கப்படும். மூன்று மாதங்களுக்குள் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு, டெண்டர் பணிகள் துவங்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நகராட்சி தலைவர் பிரமீளா கூறியதாவது:
பாலக்காடு நகராட்சியின் கட்டுப்பாட்டில் ஸ்டேடியம் உள்ளது. திட்டம் செயல்படுத்தப்பட்டால் நகராட்சியின் உரிமையை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும்.
இதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஸ்டேடியம் வாயிலாக கிடைக்கும் வருமானம் தொடர்பாகவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
ஸ்டேடியம் வளர்ச்சி திட்ட துணைத் தலைவர் கிருஷ்ணதாஸ் தலைமையிலான வழிநடத்தல் குழு கூட்டத்தில் கலந்துரையாடிய பின், நகராட்சியின் முடிவை அரசுக்கு தெரிவிக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

