/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி அருகே ஓடைக்காட்டில் மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி
/
ஊட்டி அருகே ஓடைக்காட்டில் மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி
ஊட்டி அருகே ஓடைக்காட்டில் மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி
ஊட்டி அருகே ஓடைக்காட்டில் மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி
ADDED : ஜூன் 24, 2025 09:54 PM
ஊட்டி; ஊட்டி அருகே வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊட்டி புதுமந்து அருகே ஓடைக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சுனித்,10, கக்குச்சியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சுனித்தின் தாயார் வீட்டில் சுடு தண்ணீர் வைப்பதற்காக வாளியில் தண்ணீர் வைத்து வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தி உள்ளார்.
அங்கு வந்த சுனித் எதிர்பாராத விதமாக வாளியில் கை வைத்துள்ளார். ஹீட்டரில் இருந்து மின்சார பாய்ந்தது. சுனித்தின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்து மீட்டு சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். புது மந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.