sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தரமற்ற விதையை தவிர்க்க பரிசோதனை அவசியம்

/

தரமற்ற விதையை தவிர்க்க பரிசோதனை அவசியம்

தரமற்ற விதையை தவிர்க்க பரிசோதனை அவசியம்

தரமற்ற விதையை தவிர்க்க பரிசோதனை அவசியம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி, பிப். 14---

ஊட்டி விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் நவீன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நீலகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் விதை வினியோகஸ்தர்கள் தங்கள் இருப்பு வைத்துள்ள விதைகளை, ஊட்டி ரோஸ் கார்டன், தோட்டக்கலை இணை இயக்குனர் வளாகத்தில் அமைந்துள்ள, விதை பரிசோதனை நிலையத்தில் கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இந்நிலையத்தில், விதை தர நிர்ணய காரணிகளான முளைப்புத்திறன், புறத்துாய்மை, ஈரப்பதம் போன்றவை பரிசோதனை செய்யப்படுகின்றன. ஒரு விதை மாதிரிக்கு, 80 ரூபாய் மட்டும் பரிசோதனை கட்டணமாக செலுத்தி பயிர் மற்றும் ரகம், குவியல் எண் ஆகியவை குறித்த விபர சீட்டுகளை கொடுத்து விதையின் தரத்தை அறிந்து கொள்ளலாம்.

விதை பரிசோதனைக்கு சமர்ப்பிக்க வேண்டிய பிரதான காய்கறிகளுக்கான விதை மாதிரியின் குறைந்தபட்ச அளவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கேரட், காலிபிளவர் மற்றும் முட்டைக்கோஸ், 10 கிராம்; பீட்ரூட் மற்றும் முள்ளங்கி, 50 கிராம்; பீன்ஸ் 450 கிராம்; பட்டாணி, 250 கிராம்; பாலக்கீரை 25 கிராம்; புரோக்கோலி, நுால்கோல் மற்றும் டர்னிப் 10 கிராம் எடுத்து வர வேண்டும்.

இதன் மூலம் விதையின் தரத்தை அறிந்து, விதைப்பதன் மூலம் தர மற்ற விதையினால் ஏற்படும் தேவையற்ற செலவுகளை தவிர்த்து கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.




    • Dinamalar Events


    Dinamalar