/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏழை-, எளியோரை இருளில் நிற்க வைக்கும் பட்ஜெட்! இ.கம்யூ., மாநில தலைவர் பினோய் விஸ்வம் பேட்டி

ADDED : பிப் 01, 2024 11:00 PM

பாலக்காடு;மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், ஏழை-,எளியோரை இருளில் நிற்க வைக்கும் வகையில் உள்ளது, என, கேரள மாநில இ.கம்யூ., தலைவர் பினோய் விஸ்வம் தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காட்டில் நடந்த இ.கம்யூ., கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மாநில தலைவர் பினோய் விஸ்வம் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வெறுமையாக உள்ளது. பெரு நிறுவனங்களின் வரி 30 சதவீதத்தில் இருந்து, 28 சதவீதமாகியுள்ளது. பணக்காரர்களை நேசிப்பதும், பெரும்பான்மையான சாதாரண மக்களை புறக்கணிப்பதும் வாடிக்கையாக உள்ளது. மத்திய அரசின் இந்த அணுகுமுறைக்கு, இந்த பட்ஜெட் சிறந்த உதாரணம்.
பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள், நடுத்தர வர்க்கத்தில் வசதியானர்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏழை-, எளியோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தை இருளில் நிற்க வைக்கும் பட்ஜெட். சிறப்பு மீன் வளம் உள்ள கேரளாவின் தேவையை மத்திய அரசு கேட்கவே இல்லை. அது இப்பவும் வேளாண் துறையின் கீழ் உள்ளது.
கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகிய துறைக்கு ஒதுக்கிய நிதி குறைவாக உள்ளது. கல்வித் துறையையும் மத்திய அரசு புறக்கணித்துள்ளது. கல்வி துறையை கார்ப்பரேட் அரங்கிற்கு கொண்டு செல்வது அரசின்நோக்கம்.
இவ்வாறு, அவர் கூறினார்.