நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:குன்னுார் அடுத்த ஓட்டு பட்டறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகாலட்சுமி என்பவர் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மகாலட்சுமி பணியில் இருந்த போது, அங்கு வந்த மோகன்குமார், 30, என்பவர், 'தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை; மருந்து வேண்டும்,' என, கேட்டுள்ளார்.
அப்போது, அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மகாலட்சுமி, 'மருந்து தர முடியாது,' என்று கூறியுள்ளார். அப்போது, அவர் தகாத வார்த்தைகளை பேசி உள்ளார். மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில், போலீசார் மோகன் குமாரை கைது செய்தனர்.

