/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்பை சேதப்படுத்திய யானைகள் அச்சத்தில் தட்டாம்பாறை கிராம மக்கள்
/
குடியிருப்பை சேதப்படுத்திய யானைகள் அச்சத்தில் தட்டாம்பாறை கிராம மக்கள்
குடியிருப்பை சேதப்படுத்திய யானைகள் அச்சத்தில் தட்டாம்பாறை கிராம மக்கள்
குடியிருப்பை சேதப்படுத்திய யானைகள் அச்சத்தில் தட்டாம்பாறை கிராம மக்கள்
ADDED : ஜன 24, 2024 01:00 AM

பந்தலுார்:பந்தலுார் அருகே தட்டாம்பாறை பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே தட்டாம்பாறை பகுதியில் நாள்தோறும் யானைகள் கூட்டம் முகாமிட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த பகுதிக்கு வந்த யானை கூட்டம், குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில் விவசாய பயிர்களையும், கிருஷ்ணசாமி என்பவரின் வீட்டு மேற்கூரையை சேதப்படுத்தின. அதன்பின் யானைகள் வீட்டிற்குள் தும்பிக்கையை விட்டு உணவு பொருட்களை தேடி உள்ளது. வீட்டிற்குள் கிருஷ்ணசாமி மட்டுமே இருந்த நிலையில் அவர் அருகில் உள்ள வேறு அறைக்கு ஓடி உயிர் தப்பி உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பிதர்காடு வனச்சரக வனக்காப்பாளர் கோபு தலைமையிலான குழுவினர், ஆய்வு மேற்கொண்டனர். கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 'பாதிக்கப்பட்ட குடியிருப்பிற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்,' என, உறுதி அளித்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் கடந்த பல நாட்களாக, ஐந்துக்கும் மேற்பட்ட யானைகளை முகாமிட்டுள்ளன. நாள்தோறும் இரவில் குடியிருப்பு பகுதிக்கு வருவதால், அவசர காலங்களில் கூட வெளியே வர முடியாத சூழல் உள்ளது. மேலும், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இங்குள்ள முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

