/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திருமுருக பக்தர்கள் குழு 48வது ஆண்டு விழா
/
திருமுருக பக்தர்கள் குழு 48வது ஆண்டு விழா
ADDED : ஜன 19, 2024 12:25 AM
மேட்டுப்பாளையம் : காரமடையில், நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள ஆறுமுக வேலவர் சன்னதியில் திருமுருக பக்தர்கள் குழுவினரின், 48வது ஆண்டு விழா நடந்தது. இதில், கணபதி ஹோமம், காவடி ஆட்டத்துடன் திருவீதி உலா, கன்னார்பாளையத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
ஆறுமுக வேலவர் சன்னதி முன் திருப்புகழ் இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தன. வள்ளி தேவ சேனா சமேத ஆறுமுக வேலவருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகத்தை, சிவஸ்ரீ அஸ்வின் குருக்கள் நடத்தினார். தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற அறங்காவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியை, திருமுருக பக்தர்கள் குழு தலைவர் கணேசன், செயலாளர் தண்டாயுதபாணி, பொருளாளர் தங்கவேலு மற்றும் உறுப்பினர்கள் நடத்தினர்.--

