/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரங்களில் முட்புதர்: விபத்து அபாயம்
/
சாலையோரங்களில் முட்புதர்: விபத்து அபாயம்
ADDED : ஜன 24, 2024 01:04 AM

கூடலுார்;கூடலுார் - கோழிக்கோடு சாலையில், வளைவான பகுதிகளில் வளர்ந்துள்ள முட்புதர்களால், வாகன விபத்துகள் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடலுார் - கோழிக்கோடு சாலை உள்ளூர் வாகன போக்குவரத்துக்கு மட்டுமின்றி கேரளா -- கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. இதனால், சாலையில் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. விடுமுறை நாட்களில் கேரளாவில் இருந்து நீலகிரிக்கு இவ்வழியாக அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இச்சாலையில், கூடலுார் செம்பாலா முதல் மரப்பாலம் வரையிலான சாலையோரங்களில் முட்புதர்கள் வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. மக்கள் நடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். வளைவான பகுதிகளில் வளர்ந்துள்ள முட்புதர்களால் வாகன விபத்துக்கள் ஆபத்தும் உள்ளது.
வாகன ஓட்டுனர்கள் கூறுகையில், 'இச்சாலையில் 'பீக் ஹவர்' நேரங்களில் கூடுதலாக வாகனங்கள் இயக்கப்படுகிறது. சாலையோரங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களால், வாகன விபத்துகள் நடக்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க, கூடுதல் சாலை பணியாளர்கள் நியமித்து முட்புதர்களை அகற்றி சாலையோரங்களை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.

