/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானையிடம் இருந்து உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்
/
காட்டு யானையிடம் இருந்து உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்
காட்டு யானையிடம் இருந்து உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்
காட்டு யானையிடம் இருந்து உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்
ADDED : பிப் 01, 2024 10:23 PM

பந்தலுார்:கேரள மாநிலம் முத்தங்கா சோதனை சாவடி அருகே யானையிடம் இருந்து இரு சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தமிழக எல்லையை ஒட்டிய, கேரளா மாநிலம் முத்தங்கா சோதனை சாவடி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் வனப்பகுதி உள்ளது.
சாலை ஓரங்களில் இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் அதிக அளவில் வனவிலங்குகள் நடமாடி வரும். இந்நிலையில், நேற்று மதியம் இந்த வழியாக வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இரண்டு சுற்றுலா பயணிகள், சாலை ஓரம் நின்ற யானையை புகைப்படம் எடுப்பதற்காக, காரில் இருந்து இறங்கி உள்ளனர்.
இவர்களைப் பார்த்த யானை ஆக்ரோஷமடைந்து துரத்தி உள்ளது. இவர்களை ஒட்டி ஒரு காரும் வந்த நிலையில், சில அடி துாரம் ஓடிய சுற்றுலா பயணிகளில், ஒருவர் யானையின் காலுக்கு கீழே விழுந்துள்ளார். அவரை பின்னங்காலால் உதைத்து தள்ளிவிட்டு ஓடிய மற்றொருவரை தும்பிக்கையால் பிடிக்க முயன்றுள்ளது.
அப்போது, எதிரே வந்த சரக்கு வாகனம் ஒன்று ஹாரன் அடித்ததால், யானை திடீரென திரும்பி செல்ல ஆரம்பித்தது. இதனால் யானையிடம் சிக்கிய இரண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த காட்சியை, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் 'வீடியோ' எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
வனத்துறையினர் கூறுகையில், 'கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் இருந்து, கர்நாடகா செல்லும் பயணிகள், மிகுந்த பாதுகாப்பாக செல்ல வேண்டும். வனப்பகுதியில் வாகனங்களை விட்டு இறங்கி செல்ல கூடாது,' என்றனர்.

