/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோர நகராட்சி பூங்காக்கள் மரக்கன்றுகள் நடும்பணி தீவிரம்
/
சாலையோர நகராட்சி பூங்காக்கள் மரக்கன்றுகள் நடும்பணி தீவிரம்
சாலையோர நகராட்சி பூங்காக்கள் மரக்கன்றுகள் நடும்பணி தீவிரம்
சாலையோர நகராட்சி பூங்காக்கள் மரக்கன்றுகள் நடும்பணி தீவிரம்
ADDED : அக் 20, 2025 10:03 PM
ஊட்டி: ஊட்டி நகராட்சியில் சாலையோர பூங்காக்களை சீர்படுத்தி மரக்கன்றுகள் நடும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஊட்டிக்கு கோடை சீசன், 2-வது சீசன் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, தேயிலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கிறார்கள். ஊட்டி நகரில் முக்கிய சாலையோரங்களில் சுற்றுலா பயணியரை கவரும் வகையில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பூங்காக்கள் அமைக்கப்பட்டன. ஊட்டி நகராட்சி சார்பில் ஊட்டி- - கோத்தகிரி சாலை சேரிங்கிராசில் சாலையோர பூங்கா, ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே அம்பேத்கர் நினைவு பூங்கா, அரசு கலைக்கல்லூரி சாலையில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
சாலையோர பூங்காக்கள் தனியார் நிறுவனங்கள் சார்பில் பராமரிக்கும் பணிக்காக கொடுக்கப்பட்டிருந்தன. பல பூங்காக்கள் தனியார் நிறுவனம் சார்பில் சரியாக பராமரிக்கப்படவில்லை. புதர் மண்டி காணப்பட்டது. ஊட்டி நகராட்சி நிர்வாகம் சாலையோர பூங்காக்களை சீர் செய்யும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சிறிய பூங்கா சீரமைத்து மரக்கன்றுகள் நடும்பணி நடந்து வருகிறது. பிற சாலையோர பூங்காக்கள் படிப்படியாக சீரமைக்கப்பட்டு சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் என, நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

