ADDED : ஜன 19, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சட்டவிரோதமாக பணம் வைத்து நடத்தப்படும் சீட்டாட்டத்தை தடுக்க, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பின்புறம், சட்டவிரோதமாக சிலர் சீட்டாட்டம் நடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கே சட்டவிரோதமாக சீட்டாட்டம் ஆடிய, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த யகா உதின், 75, சம்பத்குமார் 52 ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 3,080 ரூபாய் பறிமுதல் செய்தனர்.---

