/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியின மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்ல வாகன வசதி
/
பழங்குடியின மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்ல வாகன வசதி
பழங்குடியின மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்ல வாகன வசதி
பழங்குடியின மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்ல வாகன வசதி
ADDED : அக் 14, 2025 08:59 PM

ஊட்டி: மாவட்டத்தின் வன பகுதிகளில் செயல்பட்டு வரும், 3 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர சிறிய ரக வாகனகள் வழங்கப்பட்டன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சென்று வருவதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரசு சார்பில், 26 வாகனங்கள் வழங்கப்பட்டது. அதில், நீலகிரியில் உள்ள கார்குடி, பொக்காபுரம், குஞ்சப்பனை உள்ளிட்ட மூன்று பழங்குடியினர் பள்ளி மாணவர்களுக்காக, 3 சிறிய ரக வாகனங்களும் வழங்கப்பட்டது. அத்துடன் பழங்குடியினர் கிராமங்களுக்கு சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்யவும் மாத்திரைகளை வழங்குவதற்காகவும், நான்கு நடமாடும் சிறிய ரக மருத்துவ வாகனங்களும் வழங்கப்பட்டன.
தலா, 14 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. வாகனங்களின் சாவிகளை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கலெக்டர் லட்சுமி பவ்யா வழங்கினார்.
அதேபோல், நடமாடும் மருத்துவ வாகனங்களை பழங்குடியினருக்கான கோத்தகிரியை சேர்ந்த 'நாவா' தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தார். அப்போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ், 'நாவா' பழங்குடியின தொண்டு நிறுவன அமைப்பு நிர்வாகி ஆல்வாஸ் உட்பட பலர் இருந்தனர்.

