/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வித்யாதன கணபதி கோவில் கும்பாபிஷேக விழா
/
வித்யாதன கணபதி கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜன 23, 2024 11:44 PM
பெ.நா.பாளையம்;துடியலூர் அருகே அசோகபுரம் ஆசிரியர் காலனியில் உள்ள அருள்மிகு வித்யாதன கணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி, முதல் நாள் முளைப்பாலிகை தீர்த்த ஊர்வலம், தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, திருமகள் வழிபாடு, முதல் கால யாக வேள்வி ஆகியன நடந்தன.
இரண்டாம் நாள் திருமஞ்சனம், இரண்டாம் கால வேள்வி மூலமூர்த்திக்கு எண் வகை மருந்து சாத்துதல், வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு ஆகியன நடந்தன.
மூன்றாம் நாள் அருள்மிகு தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர், கால பைரவர், வித்யாதன ஆஞ்சநேயர், நவகோள்கள் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழாவும், தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை சத்திய நாராயண பெருமாள், அருள்மிகு பானசுந்தரேஸ்வரர் உடனுறை மீனாட்சி, பாலகுமாரன், மூலமூர்த்தி ஸ்ரீ வித்யாதன கணபதி தெய்வங்களுக்கு திருக்குட கும்பாபிஷேக விழா நடந்தது.
தொடர்ந்து சிறப்பு அன்னதானமும், மாலை வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியும் நடந்தது. விழாவையொட்டி, 48 நாட்களுக்கு தொடர்ந்து மண்டல பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆசிரியர் காலனி, துரைராஜ் நகர், ஸ்ரீவாரி கார்டன், அம்மன் நகர், ஸ்ரீராம் நகர், காளியப்பா அவன்யூ மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

