/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
17 வயது சிறுமி பலாத்காரம்; வாலிபருக்கு '14 ஆண்டு'
/
17 வயது சிறுமி பலாத்காரம்; வாலிபருக்கு '14 ஆண்டு'
ADDED : ஜன 23, 2024 12:55 AM
பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயன், 37, கேமரா மெக்கானிக். கடந்த 2021ல் அரியலுார் மாவட்டம், கீழப்பழுவூர் கிராமத்தில் ஒரு வீட்டில் பழுதான கேமராவை சரி செய்ய சென்றார். அப்போது, அந்த வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.
விஜயனை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த அரியலுார் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி செல்வம் நேற்று தீர்ப்பளித்தார். அதில், விஜயனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார். பின், விஜயனை போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

