/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
பைக் மீது ஆட்டோ மோதி துணை தாசில்தார் பலி
/
பைக் மீது ஆட்டோ மோதி துணை தாசில்தார் பலி
ADDED : ஜூன் 05, 2025 02:39 AM

பேரளி:பெரம்பலுார் அருகே பைக் மீது சரக்கு ஆட்டோ மோதியதில், துணை தாசில்தார் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலுார் மாவட்டம், பேரளி கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன், 55, என்பவர், வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில், துணை தாசில்தாராக பணியாற்றி வந்தார்.
நேற்று காலை, 10:00 மணிக்கு, 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில், அவர் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
துறைமங்கலம் நான்கு ரோட்டில் சென்றபோது, மதுரை மாவட்டம், கரும்பாலையைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ, கருணாகரன் ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது.
இதில், துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கருணாகரன், மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து, பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.