sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

புற்றுநோயாளியை பஸ்ஸிலிருந்து இறக்கி விட்ட கண்டக்டர்

/

புற்றுநோயாளியை பஸ்ஸிலிருந்து இறக்கி விட்ட கண்டக்டர்

புற்றுநோயாளியை பஸ்ஸிலிருந்து இறக்கி விட்ட கண்டக்டர்

புற்றுநோயாளியை பஸ்ஸிலிருந்து இறக்கி விட்ட கண்டக்டர்


ADDED : ஜன 24, 2024 01:21 PM

Google News

ADDED : ஜன 24, 2024 01:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் கட்டண சலுகை பஸ் பாஸ்சில் பயணம் செய்வதற்கு மறுத்து, பஸ்ஸிலிருந்து கண்டக்டர் இறக்கி விட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

பெரம்பலுார், மாவட்டம், குரும்பலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்,45, மா.கம்யூ., கட்சியின் மாவட்ட செயலராக உள்ளார். இவரது மனைவி சுமதி,38, கர்ப்பப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு சென்றவர் இரவு 7.30 மணியளவில் சென்னை கிளாப்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை- திருச்சி செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் டி.எண்., 01 ஏ.என்., 1923 என்ற பதிவு எண் கொண்ட பஸ்ஸில் ஏறியுள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் கட்டண சலுகை பாஸை காட்டி உள்ளார். அதனை ஏற்காத கண்டக்டர் ரமேஷ், சுமதியையும் கட்டண சலுகை பாஸில் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது எனக் கூறி தரக்குறைவாக பேசி, பஸ்ஸில் இருந்து கீழே இறக்கி விட்டார்.

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து ரமேஷ் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு தகவல் தெரிவிக்க போன் போட்டுள்ளார். அதற்கு நீ மந்திரி என்ன யாரிடம் வேண்டுமானாலும் சொல் நானும் பெரம்பலுார் தான் என்று மரியாதை குறைவாக பேசியதை பார்த்த அங்கிருந்த சக டிரைவர், கண்டக்டர்கள் அந்த பஸ்சின் கண்டக்டரை சத்தம்போட்டு மீண்டும் அந்த பஸ்ஸில் ரமேஷையும் அவரது மனைவியையும் ஏற்றிவிட்டு அமர வைத்தனர்.

அதன் பிறகும் அந்த பஸ் கண்டக்டர், பஸ் பாஸில் சென்னை -பெரம்பலுார் என்று உள்ளது. பஸ் ஸ்டேஜ் துறைமங்கலம் ஆகும். 4 ரோட்டில் தான் இறக்கி விடுவேன் எனக் கூறியுள்ளார். பஸ் நள்ளிரவு 1 மணிக்கு செல்லும் நான் என் மனைவியுடன் நான்கு ரோட்டில் இருந்து நடந்து செல்ல வேண்டும் அதனால் புது பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடுங்கள் என கேட்டதற்கு அதற்கும் மறுப்பு தெரிவித்துள்ளார்.இந்த தகவலை அமைச்சர் சிவசங்கரிடம் ரமேஷ் தெரிவித்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து பெரம்பலுார் போக்குவரத்து கழக கிளை மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கிளை மேலாளரின் அறிவுறுத்தலின்படி அந்த பஸ்ஸின் கண்டக்டர் ரமேஷ் பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டார். புற்று நோயாளிகளுக்கு அரசு கட்டண சலுகையில் பாஸ் வழங்கி உள்ள நிலையில் நடத்துனரின் இந்த செயலால் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் மிகுந்த மன வேதனை அடைந்ததாக ரமேஷ் மற்றும் அவரது மனைவி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us