/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
டூவீலர் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பரிதாப பலி
/
டூவீலர் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பரிதாப பலி
ADDED : ஜன 19, 2024 02:26 AM
பெரம்பலுார்:அரியலுார் அருகே டூ-வீலர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே வாலிபர் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் வட்டம் அதிகாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் 31. இவர் அரியலுார் ஜெயலலிதா நகரில் தங்கி பெரம்பலுார் மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் உள்ள ஒரு ஹாலோ பிளாக் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை இவர் அரியலுாரில் இருந்து அல்லிநகரத்துக்கு டூ-வீலரில் அதிவேகமாகச் சென்றார். பெரம்பலுார் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த அவர் முன்னால் சென்ற லாரியை முந்திக்குக் கொண்டு சென்ற போது பெரம்பலுாரில் இருந்து அரியலுாரில் நோக்கி வந்த அரசு பஸ் டூ-வீலர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாலன் உயிரிழந்தார். இது குறித்து அரியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

