/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
உங்க வீடுன்னா இப்படி கட்டுவீங்களா: கலெக்டர் கேள்வி
/
உங்க வீடுன்னா இப்படி கட்டுவீங்களா: கலெக்டர் கேள்வி
உங்க வீடுன்னா இப்படி கட்டுவீங்களா: கலெக்டர் கேள்வி
உங்க வீடுன்னா இப்படி கட்டுவீங்களா: கலெக்டர் கேள்வி
ADDED : பிப் 24, 2024 12:44 AM
ஆலத்துார்:பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில், செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை, பெரம்பலுார் கலெக்டர் கற்பகம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பாடாலுார் ஊராட்சியில், 42.63 லட்சம் ரூபாய் மதிப்பில் 42 கடைகளை உள்ளடக்கிய புதிய கிராம சந்தை கட்டடத்தின் கட்டுமான பணியை ஆய்வு செய்தார்.
அந்த கட்டடத்தின் சிமென்ட் பூச்சை, கை விரல்களால் தொட்டுப் பார்த்து, அதன் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது, சிமென்ட் பூச்சு, மாவு போல பெயர்ந்து கொட்டியது.
அதிர்ச்சியடைந்த கலெக்டர், கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரை அழைத்து, 'உங்கள் வீட்டு கட்டுமான பணி என்றால், இப்படி தரம் இல்லாமல் கட்டுவீர்களா...' என கோபமாக கேள்வி எழுப்பினார்.
மேலும், 'உங்களைப் போன்ற ஒப்பந்ததாரர்களால் தான், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது' என்றும் எச்சரித்தார். உடனே, தரம் இல்லாத கட்டுமானத்தை சீர் செய்ய அறிவுறுத்திய கலெக்டர், தவறினால், பில் தொகையை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டார்.

