/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
பொங்கல் சீசனில் ஆடு திருட்டு அமோகம்
/
பொங்கல் சீசனில் ஆடு திருட்டு அமோகம்
ADDED : ஜன 21, 2024 02:23 AM
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கறம்பக் குடி, அறந்தாங்கி, பொன்ன மராவதி, திருமயம் போன்ற பகுதிகளில் விவசாயம் சார்ந்த ஆடு, மாடு, கோழி வளர்ப்பு அதிகளவில் உள்ளது.
சில ஆண்டுகளாக, பட்டியில் அடைக்கப்படும் ஆடுகள், இரவு நேரங்களில் திருட்டு போவது அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில், இறைச்சி விற்பனைக்காக, அதிக அளவில் ஆடுகள் திருடப்படுகின்றன.
கறம்பக்குடி, ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை, இலுப்பூர், அறந்தாங்கி, கீரமங்கலம் மேற்பனைக்காடு உள்ளிட்ட பகுதிகளில், இரு மாதங்களில், 500க்கும் அதிகமான ஆடுகள் திருடு போயுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த வாரம், 300க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.
சம்பந்தபட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளித்தால், வழக்கு பதிவு செய்யாமல், விவசாயிகளை அலைக்கழிப்பதாகவும் புகார்கள் குவிகின்றன.
விவசாயிகள் கூறியதாவது:
மாவட்டத்தில், ஆடு திருட்டை தடுக்கவே முடியவில்லை. தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் ஆடுகள் திருட்டு அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 500க்கும் மேற்பட்ட ஆடுகள் களவு போயுள்ளன.
போலீஸ் ஸ்டேஷனில், ஆடு திருட்டுக்கு வழக்குப் பதிவு செய்வதில்லை. அழுத்தம் கொடுத்து வழக்கு பதிவு செய்தாலும், நடவடிக்கை இல்லை. விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

