/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வயலுக்குள் கவிழ்ந்த பஸ் பயணிகள் 10 பேர் காயம்
/
வயலுக்குள் கவிழ்ந்த பஸ் பயணிகள் 10 பேர் காயம்
ADDED : ஜன 19, 2024 04:35 AM
உத்தரகோசமங்கை: ராமநாதபுரத்தில் இருந்து எக்ககுடி வழியாக நல்லிருக்கை செல்லும் 24 வழித்தடம் டவுன் பஸ் சாலையோர வயல்வெளியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
நேற்று இரவு 8:00 மணிக்கு ராமநாதபுரத்திலிருந்து நல்லிருகை செல்வதற்காக எக்ககுடி அருகே சென்ற போது பஸ் வயலுக்குள் விழுந்ததில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 10 பேருக்கு கை, கால் உள்ளிட்டவற்றில் காயம் ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நீண்ட நேரம் பஸ் மீட்கப்படாமலும் உரிய நேரத்தில் காயமடைந்த பயணிகளை மீட்பதற்கு வாகனம் வராததாலும் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் உத்தரகோசமங்கை -நல்லாங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து உத்தரகோசமங்கை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

