/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் கிரேன் உடைந்து 2 பேர் காயம்
/
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் கிரேன் உடைந்து 2 பேர் காயம்
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் கிரேன் உடைந்து 2 பேர் காயம்
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் கிரேன் உடைந்து 2 பேர் காயம்
ADDED : பிப் 01, 2024 11:01 PM

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் 2 கி.மீ.,க்கு, 525 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது. இதில் 1.5 கி.மீ.,க்கு துாண்கள் அமைத்து, அதன் மீது தண்டவாளங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 500 மீட்டரில் துாண்கள் அமைத்துள்ளனர்.
இப்பாலத்தின் நடுவில் துாக்கு பாலம் அமைக்க பாம்பன் கடற்கரையில் 700 டன்னில் துாக்குப்பாலம் வடிவமைத்துஉள்ளனர்.
துாக்கு பாலத்திற்கு துாண்களை பொருத்த, பாம்பன் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் இரும்பு சதுர குழாய்களை நேற்று ஏற்றினர்.
அதை, பாலம் நடுவில் உள்ள கிரேன் மூலம் துாக்கிய போது, கிரேன் உடைந்து விழுந்தது. இதில் படகில் இருந்த ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள் மாரியப்பன், 48, கிறிஸ்டி, 45, ஆகியோருக்கு கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டன.
இருவரும் உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாம்பன் போலீசார் விசாரிக்கின்றனர்.