/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பனில் 2 டன் கட்டா மீன் சிக்கியது: மீனவர்கள் மகிழ்ச்சி
/
பாம்பனில் 2 டன் கட்டா மீன் சிக்கியது: மீனவர்கள் மகிழ்ச்சி
பாம்பனில் 2 டன் கட்டா மீன் சிக்கியது: மீனவர்கள் மகிழ்ச்சி
பாம்பனில் 2 டன் கட்டா மீன் சிக்கியது: மீனவர்கள் மகிழ்ச்சி
ADDED : பிப் 06, 2024 03:20 AM

ராமேஸ்வரம்,: ராமேஸ்வரம் அருகே பாம்பன் விசைப்படகு வலையில் 2 டன் கட்டா மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பிப்.,4ல் பாம்பனில் இருந்து 90 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம் போல் மீன்வளம் நிறைந்த மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்தனர். இவர்கள் நேற்று காலை பாம்பன் கரை திரும்பினார்கள். இதில் பெரும்பாலான படகில் விலை உயர்ந்த வெளமீன், சீலா, பாரை மீன்கள் சிக்கின.
இதில் ஒரு விசைப்படகில் 2 டன் கட்டா மீன்கள் சிக்கின. ருசி இல்லாத இம்மீனுக்கு தமிழக மீன் மார்க்கெட்டில் மவுசு இல்லை என்பதால் இதனை கருவாடாக விற்க மீனவர்கள் முடிவு செய்தனர்.
இதனால் பாம்பன் வியாபாரி ஒருவர் இம்மீனை கிலோ ரூ.130க்கு வாங்கினார். இதனை உப்பில் உலர்த்தி கேரளா மார்க்கெட்டுக்கு அனுப்ப உள்ளதாக வியாபாரி தெரிவித்தார். ஒரே படகில் 2 டன் கட்டா மீன் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.