/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
75 கிலோ கஞ்சா இலங்கையில் பறிமுதல்
/
75 கிலோ கஞ்சா இலங்கையில் பறிமுதல்
ADDED : மார் 28, 2025 07:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 75 கிலோ கஞ்சா இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கை ராணுவப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறை பொலிகண்டிப் பகுதியில் உள்ள பழைய வீட்டிற்குள் மறைத்து வைக்கப்படிருந்த 75 கிலோ கஞ்சா பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வல்வெட்டித்துறை போலீசாரிடம் கஞ்சா ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. அதன் சர்வதேச மதிப்பு 30 லட்சம் ரூபாய்.
இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.