/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதமடைந்த மின்கம்பம் மாற்றப்படாத அவலம்
/
சேதமடைந்த மின்கம்பம் மாற்றப்படாத அவலம்
ADDED : ஜன 24, 2024 05:02 AM

கமுதி : கமுதி அருகே உடையநாதபுரத்தில் மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்ததால் புதிய மின்கம்பம் மாற்றுவதற்காக கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டும் தற்போது வரை மாற்றப்படாமல் உள்ளது.
கமுதி அருகே உடையநாதபுரத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு அபிராமம் துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை செய்யப்படுகிறது. இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட மின்கம்பத்தின் வழியாக மின்சப்ளை செய்யப்படுகிறது.
முதுகுளத்துார்- -அபிராமம் சாலை உடையநாதபுரம் அருகே ஊரணிகரை அருகே சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
இதே போன்று அருகருகே உள்ள மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளது. இதனால் புதிய மின்கம்பம் மாற்றுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறக்கி வைக்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை புதிய மின்கம்பம் மாற்றப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. சேதமடைந்த மின்கம்பத்தால் ஏதாவது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு புதிய மின்கம்பம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

