/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆப்பனுார் ராமர் கோயிலில் யாக வேள்வி ஏராளமான பக்தர்கள் தரிசனம்
/
ஆப்பனுார் ராமர் கோயிலில் யாக வேள்வி ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ஆப்பனுார் ராமர் கோயிலில் யாக வேள்வி ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ஆப்பனுார் ராமர் கோயிலில் யாக வேள்வி ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜன 23, 2024 04:11 AM
கடலாடி: கடலாடி அருகே ஆப்பனுாரில் பழமையும் புராதன சிறப்பும் பெற்ற ராமரடி எனப்படும் ராமர் கோயில் உள்ளது.
அயோத்தியில் ராமபிரான் பிரதிஷ்டை நடந்த வேளையில் இங்குள்ள ராமபிரான், சீதா பிராட்டியார், லட்சுமணன், ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
கோயில் முன்பு நேற்று காலை 11:30 முதல் 12:30 மணி வரை உலக நன்மைக்கான சிறப்பு யாக வேள்வி வேத மந்திரங்கள் முழங்க நடந்தது. ஏராளமான பக்தர்கள் ராம நாம ஜெப வேள்வியில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஆப்பநாடு ராமபிரான் குலதெய்வ வழிபாட்டு குடிமக்கள் மற்றும் ஆப்பனுார் கிராம பொதுமக்கள் சுற்றுவட்டார ராம பக்தர்கள் செய்திருந்தனர்.
கடலாடி, சாயல்குடி, சிக்கல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில்
மாலை 5:30 முதல் இரவு 7:30 மணி வரை அகல் விளக்குகளால் வீடுகளில் கார்த்திகை தீபம் போல் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.