ADDED : ஜன 24, 2024 05:21 AM

திருவாடானை, : காஸ் இணைப்புடன் ஆதார் இணைக்கும் பணி துவங்கியதால் கூட்டம் அலைமோதுகிறது.
சமையல் காஸ் இணைப்பு வைத்திருப்பவரின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கபட்டுள்ளது. திருவாடானை, தொண்டியில் உள்ள சமையல் எரிவாயு அலுவலகங்களில் இதற்கான பணியை துவக்கியுள்ளனர். காஸ் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ அவர்களது ஆதார் அட்டையுடன் சென்று ஆதார் இணைப்போடு கைரேகை பதிவும் எடுக்கப்படும்.
இது குறித்து சமையல் காஸ் ஏஜென்டுகள் கூறியதாவது: ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் இனி இறந்தவரின் பெயரில் உள்ள இணைப்பில் சிலிண்டர் வாங்க முடியாது. இறந்தவரின் ரேஷன் அட்டையில் பெயர் உள்ள மற்றொருவர் உரிய ஆவணங்கள் கொடுத்து அவர்கள் பெயரில் இணைப்பை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றனர். இந்த அறிவிப்பால் கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு அலுவலகங்கள் முன்பு கூட்டம் அலைமோதுகிறது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

