ADDED : ஜன 14, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், : -ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியில்கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிநடந்தது. மாணவர்கள் சந்தித்து நெகிழ்ச்சியடைந்தனர்.
தாளாளர் செல்லதுரை அப்துல்லா தலைமைவகித்து முன்னாள் மாணவர்களிடம் நலம் விசாரித்தார். செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் பாத்திமா சானஸ் பரூக் முன்னிலைவகித்தார்.
வணிகவியல் மற்றும் பயன்பாட்டியல் துறைத்தலைவர் ராஜமகேந்திரன் வரவேற்றார். முதல்வர் பாலகிருஷ்ணன் துவக்கவுரையாற்றினார்.
மாணவர் ஆலோசகர் நுண்ணுயிரியல் துறை மூத்த பேராசிரியர் காசிநாததுரை, செய்யதுஅம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா பேசினர்.
கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்ஸ்பெக்டர் ஆடிவேல் பங்கேற்றார். முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் நப்ரோஸ்கான் நன்றி கூறினார்.

