/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அங்கன்வாடி கட்டடம் கட்டும் பணி துவக்கம்
/
அங்கன்வாடி கட்டடம் கட்டும் பணி துவக்கம்
ADDED : ஜன 19, 2024 04:47 AM
சாயல்குடி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சாயல்குடி அருகே மாரியூர் ஊராட்சி மேலமுந்தல் கிராமத்தில் சேதமடைந்த அங்கன்வாடி கட்டடம் அகற்றப்பட்டு புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கியது.
இங்குள்ள சேதமடைந்த கட்டடத்தின் ஆபத்தை உணர்ந்த பெற்றோர் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக தனியார் வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. அமைப்பாளர் உட்பட 20 குழந்தைகள் உள்ளனர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சேதமடைந்த பழைய அங்கன்வாடி கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. அங்கன்வாடி மையத்திற்கான புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

