/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அனைத்து துறைகளிலும் சாதிக்கும் ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
/
அனைத்து துறைகளிலும் சாதிக்கும் ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
அனைத்து துறைகளிலும் சாதிக்கும் ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
அனைத்து துறைகளிலும் சாதிக்கும் ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
ADDED : ஜூன் 25, 2025 08:40 AM
பரமக்குடியில் பாரம்பரியமிக்க வைசிய சமூக பெருமக்களின் பெரு முயற்சியால் 1984ம் ஆண்டு ஆயிர வைசிய மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி துவங்கி தற்போது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்துள்ளது.
ஆயிர வைசிய சபை மற்றும் கல்வி நிறுவனங்களில் தலைவர் போஸ், இணைத்தலைவர் பாலுசாமி உள்ளிட்டோர் தலைமையில் பள்ளி செயல்படுகிறது. பள்ளி செயலாளர் முருகானந்தம், பொருளாளர் ராஜேஷ் கண்ணன், இணைச் செயலாளர்கள் பி.பிரசன்னா, கேடி.ஆர்.ஆர்.பிரசன்னா உள்ளிட்டோர் பொறுப்பில் உள்ளனர்.
பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
இக்கல்வி நிலையத்தில் படிப்பு மட்டுமே குறிக்கோள் அல்ல என்பதுடன், உடல் மற்றும் மன வலிமையையும் மேம்படுத்தும் உள்ளரங்க விளையாட்டு போட்டிகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
கராத்தே, யோகாவில் மாவட்ட, மாநில, சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெற்றுள்ளனர்.
மேலும் திறமைக்கு சவால் விடும் திறனாய்வு போட்டிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி பல வெற்றிகளையும், பரிசுகளையும் வென்று சாதித்து வருகின்றனர்.