/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேபிஸ் நோயால் சிறுவன் பலி உறவினர் 127 பேருக்கு தடுப்பூசி
/
ரேபிஸ் நோயால் சிறுவன் பலி உறவினர் 127 பேருக்கு தடுப்பூசி
ரேபிஸ் நோயால் சிறுவன் பலி உறவினர் 127 பேருக்கு தடுப்பூசி
ரேபிஸ் நோயால் சிறுவன் பலி உறவினர் 127 பேருக்கு தடுப்பூசி
ADDED : செப் 26, 2025 02:43 AM
ராமநாதபுரம்:ரேபிஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவன் இறந்ததால், அவரது உறவினர்கள், 127 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ராமநாதபுரம் அண்ணா நகரை சேர்ந்த, 17 வயது சிறுவன் கறிக்கடையில் வேலை பார்த்தார்.
சில நாட்களுக்கு முன், அவரை தெரு நாய் கடித்ததில் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டது. ராமநாதபுரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், பின் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இருக்க மறுத்து வீடு திரும்பிய நிலையில், நேற்று முன்தினம் இறந்தார்.
இதையடுத்து, சுகாதாரத்துறை சார்பில் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள், அவரது வீடு அமைந்துள்ள அண்ணா நகரில், 127 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.
இதுகுறித்து ராமநாதபுரம் நகர்நல அலுவலர் டாக்டர் ரத்தினகுமார் கூறுகையில், ''உடல் பரிசோதனையில் தான் ரேபிஸ் நோயை உறுதி செய்ய முடியும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரேபிஸ் தடுப்பூசி போட்டுள்ளோம்,'' என்றார்.