/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் கண்ணாடி உடைத்தவருக்கு இரண்டு ஆண்டு சிறை
/
பஸ் கண்ணாடி உடைத்தவருக்கு இரண்டு ஆண்டு சிறை
ADDED : ஜன 26, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் ராமநாதபுரத்தில் இருந்து சத்திரக்குடி வழியாக காமன்கோட்டைக்கு 2023 பிப்.,ல் டவுன் பஸ் சென்றது. காமன்கோட்டை ராமசாமி மகன் கண்ணன் 39, சத்திரக்குடியில் அந்த பஸ்சில் ஏறினார்.
பஸ்சில் கண்ணனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பரமக்குடியை சேர்ந்த கண்டக்டர் இளமாறன் 54, கண்ணனை கண்டித்தார். ஆத்திரமடைந்த கண்ணன் பஸ்சின் பின் பக்க கண்ணாடியை உடைத்தார். போலீசார் கண்ணனை கைது செய்தனர். வழக்கு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி குமரகுரு கண்ணனுக்கு இரண்டு ஆண்டு சிறை, 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

