/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
/
காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
ADDED : ஜன 24, 2024 05:11 AM
முதுகுளத்துார் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் கடலாடி முக்குரோடு அருகே காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது.
முதுகுளத்துார் பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சாலையில் குழாய் பதிக்கப்பட்டு தண்ணீர் செல்கிறது.
இந்நிலையில் கடலாடி முக்கு ரோடு அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையோரத்தில் தண்ணீர் வீணாகியது. இதனால் இப்பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமானது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பேரூராட்சி பணியாளர்கள் கடலாடி முக்குரோடு அருகே குழாய் உடைப்பை சரி செய்தனர். அங்கு சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
எனவே நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேபோன்று பேரூராட்சி அலுவலகம் அருகே இரண்டு இடங்களில் ஏற்பட்டுள்ள காவிரி குழாய் உடைப்பை பணியாளர்கள் சீரமைத்தனர்.

