/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மிளகாய் செடியில் நோய் தாக்குதல்
/
மிளகாய் செடியில் நோய் தாக்குதல்
ADDED : ஜன 21, 2024 03:17 AM
விவசாயிகள் கவலை
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகாய் செடிகளில் இலைச்சுருட்டு நோய் தாக்குதல் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மிளகாய் செடிகளில் தற்போது பூக்கள் பூத்து காய்கள் காய்த்து வருகின்றன. இந்நிலையில், செடிகளில் வளர்ச்சி தடைபடும் வகையில் செடிகளின் இலைகள் சுருண்டு இலை சுருட்டு நோய் தாக்குதலுக்கு உள்ளாகி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சேத்திடல், சீனாங்குடி, முத்துப்பட்டினம், எட்டியத்திடல், வண்டல், புல்லமடை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் செடிகளில் இந்த நோய் தாக்குதல் உள்ளதால் மிளகாய் விவசாயிகள் மகசூல் இழப்பு ஏற்படும் என கவலை அடைந்துள்ளனர்.
----

