/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.பி.பட்டினத்தில் காங்., ஆர்ப்பாட்டம்
/
எஸ்.பி.பட்டினத்தில் காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 23, 2024 04:14 AM

திருவாடானை: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அசாம் மாநிலத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரையை சீர்குலைக்கும் எண்ணத்துடன் தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து காங்., சார்பில் எஸ்.பி.பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காங்., ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமை வகித்தார். திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம், தேசிய மீனவர் காங்., தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, ராமநாதபுரம் முன்னாள் மாவட்ட தலைவர் செல்லதுரை அப்துல்லா, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன்.
மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்பிர மணியன், திருவாடானை வட்டார காங்., தலைவர்கள் கணேசன், தெட்சிணாமூர்த்தி, கவுன்சிலர்கள் கார்த்திகைராஜா, மேகலா, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மரிய அருள், குமார், உதயகுமார், மீனவர் அணி மாநில பொதுசெயலாளர் முத்துராக்கு, மாவட்ட செயலாளர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

