/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மான்களால் பயிர்கள் சேதம்: இழப்பீடு வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிப்பு
/
மான்களால் பயிர்கள் சேதம்: இழப்பீடு வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிப்பு
மான்களால் பயிர்கள் சேதம்: இழப்பீடு வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிப்பு
மான்களால் பயிர்கள் சேதம்: இழப்பீடு வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிப்பு
ADDED : ஜன 24, 2024 05:09 AM

ராமநாதபுரம் :ராமநாதபுரம் மாவட்டத்தில் மான்கள், காட்டுப்பன்றிகளால் பயிர்கள் அழிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதால் இழப்பீடு வழங்க அதிகாரிகள் அலைக்கழிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கமுதி, பரமக்குடி தெளிச்சாத்தநல்லுார், சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, தொண்டி, மண்டபம், உச்சிபுளி உள்ளிட்ட இடங்களில் அடர்ந்த சீமைக்கருவேல மரக்காடுகள் பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளன.
இவை இரவு நேரத்தில் மேற்கண்ட பகுதிகளில் நெற்பயிர், மிளகாய், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
இழப்பீட்டு தொகைக்கு விண்ணப்பித்தால் அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவிவசாயிகள் புலம்புகின்றனர்.
பரமக்குடி அருகே இலந்தைகுளம் விவசாயி என்.எஸ்.பாஸ்கர பத்மநாபன் கூறுகையில், 3 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளேன். இரவு நேரத்தில் கூட்டமாக புள்ளிமான்கள் வயலில் புகுந்து சேதப்படுத்தியுள்ளன.
இழப்பீடு கேட்டு வனத்துறை, வேளாண் துறை பல முறை புகார் அளித்தும் தொடர்ந்து அலைக்கழிக்கின்றனர்.
கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன். வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்குரிய இழப்பீட்டு தொகை விரைவில் வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.

