/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதம் அடைந்துள்ள ரோடு: மக்கள் பாதிப்பு
/
சேதம் அடைந்துள்ள ரோடு: மக்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 24, 2024 01:58 AM
முதுகுளத்துார் : -முதுகுளத்துார் அருகே கடம்போடை கிராமத்திற்கு செல்லும் தார் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.முதுகுளத்துார் அருகே கடம்போடை கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
முதுகுளத்துாரிலிருந்து தேரிருவேலி, பூசேரி வழியாக கடம்போடை கிராமத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.கடம்போடை கிராமத்திற்கு செல்லும் தார்ரோடு கடந்து சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. பின்பு முறையாக பராமரிப்பு பணி செய்யப்படாததால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. இவ்வழியே வாகனங்களில் செல்வதற்கே மக்கள் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.ரோட்டோரங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்லும் போது காயங்கள் ஏற்படுகிறது.எனவே கடம்போடை கிராமத்திற்கு செல்லும் தார் ரோட்டை பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.