/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஹெலிகாப்டர் சக்கரம் பதிந்தது பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை
/
ஹெலிகாப்டர் சக்கரம் பதிந்தது பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை
ஹெலிகாப்டர் சக்கரம் பதிந்தது பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை
ஹெலிகாப்டர் சக்கரம் பதிந்தது பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை
ADDED : ஜன 21, 2024 07:40 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்திற்கு வந்த பிரதமர் மோடியின் எம்.ஐ17 ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது சக்கரம் 20 செ.மீ., தரையில் புதைந்தது. ெஹலிபேட் அமைத்தது குறித்துபாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
பிரதமர் மோடி தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தில் உள்ளார். நேற்று காலை திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் நேற்று மதியம் 2:15 மணிக்கு ராமேஸ்வரம் அருகே அமிர்தா பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட ெஹலிபேடில் வந்திறங்கினார்.
சமீபத்தில் பெய்த தொடர் மழையால் மைதானம் முழுவதும் ஈரப்பதமாக இருந்தது. இதனை சரி செய்து ெஹலிபேடு அமைக்கப்பட்டிருந்தது. பிரதமர் வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது அதன் சக்கரம் 20 செ.மீ., வரை தரையில் புதைந்தது.
இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மைதானம் அமைக்கப்பட்ட விதம், பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாட்டில் குறைபாடு ஏற்பட்டுள்ளதா, ஹெலிபேட் அமைத்தவர்கள் குறித்தும் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

