/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நிவாரணத்தொகை கேட்டு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
/
நிவாரணத்தொகை கேட்டு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
நிவாரணத்தொகை கேட்டு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
நிவாரணத்தொகை கேட்டு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 01, 2024 10:38 PM

முதுகுளத்துார் --முதுகுளத்துார் தாலுகாவில் மழையால்பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஊர்வலமாக சென்று முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதுகுளத்தூர் தாலுகாவில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் செய்திருந்தனர்.அதிக மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி வீணாகியது.
இதையடுத்து நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு வைகை பாசன விவசாய சங்க தலைவர் பாக்கியநாதன் தலைமை வகித்தார். முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஜார், காந்தி சிலை வழியாக விவசாயிகள் ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்க சென்றனர்.
அப்போது விவசாயிகள்கோரிக்கையை அதிகாரிகள்ஏற்காததால் தாலுகா அலுவலகம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு முதுகுளத்துார் டி.எஸ்.பி., சின்னகண்ணு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தாசில்தாரிடம் மனு அளிக்க சென்றனர். தாசில்தார் சடையாண்டியிடம் மனு அளித்தனர்.
கலெக்டரிடம் தெரிவித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்ததின்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர். ஊராட்சி தலைவர்கள் செல்வநாயகபுரம் பாலுச்சாமி, நல்லுார் தங்கபாண்டியன், ஆனைசேரி முருகவேல், கீரனுார் ஜோதி, புளியங்குடி இந்துமதி உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

